Thursday, September 30, 2010

நீராக இரு...

நீராக இரு...

நீரிலிரூந்து பிறந்தவனே!
நீ ஏன் நீராகவே இரூக்கக் கூடாது?
நீ மட்டும் நீராகவே இருந்தால்
இல்லாமல் போகமாட்டாய்.

நீ மட்டும் நீராகவே இருந்தால்
தவிர்க்கப்பட முடியாதவனாய் இருப்பாய்
நீ மட்டும் நராகவே இருந்தால்
உன்னை யாரும் காயப்படுத்தவவே முடியாது.
நீரைப்போல் மென்மையாக இரு.

நீர் ஆயுதமில்லாமல் போராடுகிறது.
ஆனால் எல்லாவற்றையும் வென்றுவிடுகிறது.
நீரைப்போல் கீழ்நோக்கிச் செல்.
கீழேசெல்வது தாழ்ந்துபோதல் அல்ல -
ஆழ்ந்து போதல்.

ஆழமே முத்துக்களை கர்ப்பம் தரிக்கிறது.
கீழே செல்லும் நீர்தான் மேலே செல்கிறது.
இந்த பூமியில் நீரைவிட மேலே செல்வது எது?
நீரைப்போல் ஓடுகிறவனாக இரு.
ஓடுவதுதான் வாழ்க்கை, நிற்பது மரணம்.
நீரைப்போல் உன் கரைகளை
நீயே உண்டாக்கிக் கொள்.

நீரைப்போல் உன் சிறைகளிலிருந்து
கசிகின்றவனாக இரு.
நரைப்போல் தாக வேர்களுக்கெல்லாம்
தாய்ப்பாலாய் இரு.

நீரைப்போல் சுத்தம் செய்கிறவனாய் இரு -
அப்போதுதான் நீ தெவிட்டாதவனாக இருப்பாய்.
நீரைப்போல் சலனமற்றிரு.

சூரியனும் சந்திரனும் உனக்குக் கிடைப்பார்கள்.
நீரைப்போல் -
தாமைாஇலைக்குக் கீழேயும் மேலேயும்
வெவ்வவேறுவிதமாய் இரு.

நீரைப்போல் எல்லாவற்றையும்
எழுதுகிறவனாய் இரு.
உன்மேல்யாரும் எழுத முடியாதபடி இரு.
நீரைப்போல்-
எங்கே சுற்றி அலைந்தாலும்
இருதியில் உன் மூலசமூத்திரத்தை
அடைவதையே குறிக்கோளாய்க்
கொள்வாயாக!


புத்தகம்; குங்குமம்
கவிக்கோ. அப்துல் ரகுமான்

Wednesday, September 29, 2010

உன் வரவுக்காக காத்திருக்கிறேன் மகனே!


உன் மருஜென்மத்தை பார்த்த பினால்தாண்
நான் கண் மூடுவேன்
நீ பேசிய ஒரு வார்த்தையை கேட்டப்பிறகு தாண்
நான் கண் மூடுவேன்
உன் அழகான சிரித்த முகத்தை நான் எப்போது
பார்ப்பேனோ
என் உடல் பாடையில் போவதற்கு முன்னால் நான்
பார்ப்பேனோ
அல்லது பார்க்காமலே நான் கண் மூடிவிடுவேனோ!
உனக்காக காத்திருக்கும் உன் அம்மா.


எழுதியவர் ரேஹனா 

Monday, September 27, 2010

என் வேண்டுதல் நிரைவேருமா?

என் வேண்டுதல் நிரைவேருமா?


எனக்கு ஒர் அழகான குடும்பம் இருந்ததது. அதில் நிறைய சந்தோஷங்கள் இருந்தது. நான் என் அப்பா கே. லியாகத் அலி, அம்மா ஜரினா, அக்கா கே.ஷஹினா பானு, தம்பிகள் தப்ரேஸ் அலி, பர்வேஸ் அலி. என் அக்காவுக்கு கல்யாணம் ஆனது. என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால் என் பெரிய தம்பி ஹபிஸ் படிப்பை நிருத்திவிட்டான். சின்ன தம்பி தப்ரேஸ் 10வது வரை படிப்பை நிருத்திவிட்டான்.அப்பாவுடன் சேர்ந்து இறைச்சி வியாபாரம் செய்தான். என் அப்பா நெஞ்சு வலி வந்து இறந்துவிட்டார். என் இரண்டு தம்பிகளும் சேர்ந்து வியாபாரம் செய்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றினார்கள். என் தம்பி தப்ரேஸ்க்கு இரண்டு கணவுகள் இருந்தது. ஒன்று வீடு கட்டணும்,இரண்டாவது தன் அக்கா(என்) கல்யாணத்தை நன்றாக செய்ய வேண்டும் என்பான். எல்லோரும் சொல்லவேண்டும் தன் அப்பா இல்லாவிட்டாலும் தன் அக்கா கல்யாணத்தை நன்றாக செய்தான் என்று எல்லோரும் வியந்து சொல்ல வேண்டும் என்று அடிக்கடி கூறுவான். அதேபோல் என்கல்யாணத்திற்கு வேண்டிய எல்லாவற்றையும் சேர்த்தான். என் இரண்டு தம்பிகளுக்கும் நான் என்றால் உயிர்.என்னை விட்டு பிரியமாட்டார்கள். என் அம்மாவின் அக்கா பையன் கல்யாணத்திற்கு சென்னை சென்றோம். நாங்கள் சந்தோஷமாக இருந்த கடைசி நாள்.

26\4\2010அன்று கல்யானம் ஆனது. 27\4\2010அன்று காலை நான் என் இரு தம்பிகள், என் அம்மாவின் தங்கை பெரியமகன் நாசர், அவன் தங்கை,தம்பி,என் அம்மாவுடைய மாமா பெண், அம்மாவின் சிறிய தங்கை பையன், என் அக்காபெண், மற்றும் என் அம்மாவின் பெரியப்பா மகன் உஸ்மான் நாங்கள் எல்லோரும் மெரினா கடற்கரைக்கு சென்றோம்.

வெளிச்சமாக இருந்த என் குடும்பத்தில்
காற்று அல்ல மழையும் அல்ல-ஒரு
அலை வந்து என் குடும்பத்தை
இருட்டாக்கியது?

அவர்கள் டிரஸ் மடித்து பையில் வைத்தேன்'' திடீர் என்று எல்லோரும் அலறினார்கள் என்தம்பி தப்ரேஸ் கத்தும் சத்தம் கேட்டது திரும்பி பார்த்தால் அலையில் என்தம்பி தப்ரேஸ் மாற்றிகொண்டான். அவனை காப்பாற்ற என் அம்மாவின் தங்கைமகன் சென்றான் அவனும் அலையில் மாற்றிக்கொன்டான். அவர்கள் இருவரையும் காப்பாற்ற என் அம்மாவின் பெரியப்பா மகன் உஸ்மான் அவனும் அலையில் மாற்றிக்கொன்டான்.மூவரையும் அலை இழுத்துக்கொண்டது.நாசர், தப்ரேஸ் இரண்டு மணிநேரத்தில் கிடைத்தது.ஆனால் உஸ்மானின் உடல் இரண்டு நாள் கழித்துதான் ஹார்பரில் கிடைத்தது.அவன்முகம் சிதைந்தநிலையில் அவன் உடைகளை வைத்துதான் கண்டுபிடித்தோம். அந்தநேரத்தில் உதவவும் யாரும்வரவில்லை. அங்கு இதுபோன்று விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக கூறினார்கள்.
என் குடும்பத்தில் நடந்த விபத்து யாருக்கும் நடக்ககூடாது.


குறிப்பு; அன்று நான் என் தம்பியை இழந்ததற்கு காரணம் எங்களின் கவனக்குறைவுமட்டும் அல்ல சரியான வழிகாட்டுதல் இல்லாததும் காரணமாகும்.அங்கு தயவுசெய்து அறிவுப்புபலகையை பெரிதாக வைக்கவும். இதை படித்து யாராவது இதுபோன்று விபத்து கடற்கரையில் நடக்காமல் இருக்க உதவும்.                                                                                                           

                                                                              எழுதியவர்; ரேஹனா பானு